பிரபல நடிகையின் மகன் கொரோனாவுக்கு பலி…கணவன் கவலைக்கிடம்

ஐதராபாத்தைச் சேர்ந்த நடிகை கவிதா, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாகவும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

1976ல் ‘ஓ மஞ்சு’படத்தின் மூலம் அறிமுகமானவர். தமிழில் அமராவதி, ஆட்டுக்கார அலமேலு, நாடோடித் தென்றல், காற்றினிலே வரும் கீதம், அல்லி தர்பார், வைதேகி கல்யாணம், செந்தமிழ் பாட்டு, நட்சத்திர நாயகன் உள்ளிட்ட ஏராளமான உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது, சின்னத்திரையில் இவர் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், கவிதாவின் கணவர் தசரத ராஜ் மற்றும் மகன் சாய் ரூப் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதனால், இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதில், இவரது மகன் சாய் ரூப் பாதிப்பு தீவிரமாகி இறந்துள்ளார். அவரது, கணவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *