பேமிலி மேன் மூன்றாம் பாகத்தில் விஜய் சேதுபதியா?

இந்தியாவில், ஓடிடி தளத்தில் வெளியான பேமிலி மேன் வெப் தொடரின் முதல் பாகமும், இரண்டாம் பாகமும் மக்களிடம் வரவேற்ப்பைப் பெற்றாலும் அரசியல் ரீதியாக பல விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.

பேமிலி மேன் முதல் பாகம் இந்தியாவுக்கு எதிராக திட்டமிடும் காஷ்மீர் தீவிரவாதிகள் பற்றிய கதை.சமீபத்தில் வெளியான 2வது சீசன் இந்தியாவில் வெடிகுண்டு திட்டத்தை செயல்படுத்த இலங்கை தீவிரவாத குழு ஒன்றும், பாகிஸ்தான் உளவு பிரிவும் திட்டமிடுவதான கதை.

இரண்டாம் பாகத்தின் பெரும்பகுதி கதைக்களம் சென்னையில் நடப்பது போல் இருப்பதால் படப்பிடிப்பும் சென்னையில் வைத்து நடத்தப்பட்டது. அந்த நேரத்தில் சீரியலின் இயக்குனர்கள், ராஜ் மற்றும் டீகேவும், நடிகர் மனோஜ் பாஜ்பாயும் விஜய் சேதுபதியை சந்தித்து பேசி இருக்கிறார்கள்.

இது குறித்து மனோஜ் பாஜ்பாய் கூறுகையில், “நான் விஜய் சேதுபதியை சந்திக்க விரும்பியபோது அவர் உடனடியாக ஒப்புக்கொண்டார்.

நாங்கள் ஒன்றாக நிறைய நேரம் செலவு செய்தோம். சென்னையின் உண்மையான மனிதர்களைப் பார்க்க விரும்பினேன் அதற்கான சந்திப்புதான் இது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சந்திப்பு பேமிலி மேன் மூன்றாம் பாகத்தில் விஜய் சேதுபதியை நடிக்க அழைப்பதற்கானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *