பிறந்தநாளில் வெளியாகும் பிரபல நடிகரின் ஃபர்ஸ்ட் லுக்!
மாஸ்டர் வெற்றிக்குப் பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் 65 படத்தில் நடித்து வருகிறார் விஜய். பூஜா ஹெக்டே, பூவையார், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருக்கிறது.
சமீபத்தில் இப்படத்தின் பாடல் காட்சிகள் ஜார்ஜியாவில் எடுக்கப்பட்டன. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், விஜய் ரசிககர்கள் உற்சாகமுடன் காத்திருக்கிறார்கள். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.