விஸ்வநாத் ஆனந்த பயோபிக்கில் நடிக்க விரும்பும் அமீர்கான்

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையால் ஏற்படும் கொரோனா பாதிப்பால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காகப் போடப்பட்டுள்ள பொது முடக்கத்தால் ஏராளமானோர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்காகத் தனியார் தொண்டு நிறுவனங்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் எனப் பலர் உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக செஸ் சாம்பியன் விஸ்வநாதனுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் செக்மோட் கோவிட் என்ற நிகழ்ச்சியின் மூலம் நிதி திரட்ட செஸ் போட்டியில் கலந்துகொண்டார்.

பின்னர், இருவருக்கும் கலந்துரையாடலில் விஸ்வநாதன் ஆனந்தின் பயோபிக்கில் நடிக்க அமீர்கான் விருப்பம் தெரிவித்தார். இதற்கு விஸ்வாந்தன் ஆனந்த் அதற்காக நீங்கள் உடல் எடையை ஏற்ற வேண்டியதில்லை என வேடிக்கையாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *