25 லட்சம் வழங்கிய விஜய்சேதுபதி
கொரோனா இரண்டாவது அலையினால் ஏற்படும் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது.
இதனால், ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் சிகிச்சைக்குத் தேவையான பொருட்களுக்காக நிவாரணம் வழங்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருந்தார்.
அதன்படி, பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் ஆகியோர் நிவாரணம் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று(15.6.2021) நடிகர் விஜய்சேதுபதி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரைச் சந்தித்து 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளார்.