சிம்பு நடித்துள்ள படத்தை வெளியிட தடையில்லை…சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

சிம்பு – ஹன்சிகா நடித்துள்ள மஹா படத்தை வெளியிட தடை விதிக்க கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சிம்பு, நடிகை ஹன்சிகா நடிப்பில் மஹா என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்தை எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் தயாரிக்கிறார். இப்படத்தை உபைத் ரஹ்மான் ஜமீல் இயக்கினார். இந்நிலையில், தனது கதையை வைத்து, தனக்கு தெரியாமல் படத்தை முடித்து, ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முயற்சிப்பதாக கூறி, படத்தை வெளியிட தடை கோரி இயக்குனர் ஜமீல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரம் தொடர்பாக இயக்குனர்கள் சங்கத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் இயக்குனருக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கியில் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை வழங்க தயாரிப்பு தரப்பில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. அதேபோல, இயக்குனரும் அதை ஏற்றுக் கொண்டதாகவும், 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை இயக்குனருக்கு வழங்கி விட்டதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இயக்குனர் சங்கத்தில் நடந்த பேச்சுவார்த்தை முடிவின் அடிப்படையில் படத்தை ஓ.டி.டி தளத்தில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை தயாரிப்பாளர் தரப்பில் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதேசமயம், பிரதான வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய இரு தரப்பினருக்கும் உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 28 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தைப்பூச இலவச புடவைகள் வழங்கும் விழா கூட்ட நெருசலில் சிக்கி 4 பெண்கள் பரிதாப பலி

வாணியம்பாடியில் தைப்பூசம் முன்னிட்டு இலவச புடவைகள் வழங்கும் விழாவிற்காக டோக்கன்களை பெற கூட்ட…

‘செவ்வாய் கிரகத்தில் கூட கால் வைத்து விடலாம்… கோவில் கருவறைக்குள் முடியாது’ ஆசிரியர் கி.வீரமணி கோபம்…!

செவ்வாய் கிரகத்தில் கூட இன்றைய காலகட்டத்தில் மனிதன் கால் வைக்க முடிந்த நிலையில்…