இறந்த பின்பும் வாழும் கன்னட நடிகர்

2011 ஆம் ஆண்டு கன்னட திரையுலகில் தனது வாழ்க்கையித் தொடங்கினார் சஞ்சாரி விஜய். பின், 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ‘நான் அவனல்ல’ ‘, ’அவளு’ ஆகிய படங்களின் நடித்ததன் மூலம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார்.

கடைசியாக, இவர் நடிப்பில் கடந்த ஆண்டு ஏசிடி 1978 படம் வெளியாகியிருந்தது. இந்நிலையில், இவர் கடந்த வாரம் சனிக்கிழமை தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவர்களது வாகனம் சாலையில் உள்ள மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இருவருமே முகக்கவசம் அணியாததால் சஞ்சாரியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரது நண்பருக்குக் காலில் அடிபட்டது.

இதனையடுத்து, உடனடியாக இருவரும் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சஞ்சாரி விஜய் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் உடனடியாக அன்றிரவு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சஞ்சாரி விஜய் இன்று அதிகாலை 3.34 மணிக்கு காலமானார். மருத்துவர்களின் வழிகாட்டுதலின்படி சஞ்சாரி விஜய்யின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன் மூலம் தான் இறந்தாலும் பலருக்கு உயிர்கொடுத்துள்ளார் சஞ்சாரி விஜய்.

நடிகர் சஞ்சாரி விஜய்யின் இறுதிச்சடங்குகளின்போது காவல்துறை மரியாதை அளிக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *