தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் தனது உடல் நலத்திற்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுநீரக சிகிச்சை எடுத்துக் கொண்டு இந்தியா திரும்பினார்.
மீண்டும் அமெரிக்கா செல்ல முயன்ற போது, கொரோனா பொது முடக்கத்தால் செல்ல முடியாத நிலை இருந்தது.
இதனையடுத்து, கொரோனா இரண்டாவது அலை பரவல் முடிந்த பிறகு அமெரிக்கா செல்லலாம் என காத்திருக்கிறார்.
ஆனால், தற்போது கொரோனா மூன்றாவது அலையும் வரும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளதால் காலம் தாழ்த்தாமல் அமெரிக்கா செல்ல ரஜினி முடிவெடுத்துள்ளார்.
இதனையடுத்து, தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்ல மத்திய அரசிடம் ரஜினிகாந்த் அனுமதி கேட்டிருந்தார்.
இதற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. சிறப்பு தனி விமானத்தில் 14 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். ரஜினிகாந்துடன் செல்லும் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.