தேசிய விருது பெற்ற கன்னட நடிகர் மரணம்!

இரு சக்கர வாகன விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கன்னட நடிகர் சஞ்சரி விஜய் காலமானார்.

தனது நண்பர் நவீன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது வழுக்கி அருகிலிருந்த மின்கம்பத்தில் மோதியதில் பலத்த காயங்களுடன் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சஞ்சரி விஜய் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு எடுத்ததைத் தொடர்ந்து சஞ்சரி விஜய் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 38 வயதான சஞ்சரி விஜய்யின் திடீர் மரணம், கன்னட திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நடிகர் சஞ்சரி விஜய் ‘Naanu Avanalla.Avalu’ என்கிற படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…