பாபநாசம் -2 வந்தால் கமலுக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார்?

மலையாளத்தில் ஜித்து ஜோசப் – மோகன்லால் கூட்டணியில் த்ரிஷ்யம் படம் 2013 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்தது.

அது மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகள் மட்டுமின்றி சீன மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது. வெளியிடப்பட்ட அனைத்து மொழிகளிலுமே படம் மக்களைக் கவரந்து வெற்றி பெற்றது.

தமிழில் பாபநாசம் என்ற பெயரில் வெளிவந்த இந்தப்படத்தில் கமல் – கவுதமி ஆகியோர் ஜோடியாக நடித்திருந்தனர்.

இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் ஜித்து ஜோசப் – மோகன்லால் கூட்டணியில் வெளிவந்தது. கொரோனா பொது முடக்கத்தால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியானது. ஆனாலும், மக்களிடம் வரவேற்பைப் பெற்றது.

இதனையடுத்து, பாபநாசம் 2 படம் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். ஒரு வேளை பாபநாசம் 2 வெளியாகும் பட்சத்தில் அதில் கமலுக்கு ஜோடியாக யார் நடிக்கப்போவது என்பதும் ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாபநாசம் படத்தில் கமல் – கவுதமி இணைந்து நடித்திருந்த நிலையில், தற்போது அவர்கள் பிரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால், கமல் தரப்பில் இப்போது, விக்ரம்’, ‘இந்தியன் 2’ மற்றும் ‘பிக் பாஸ் 5’ ஆகியவற்றில் தான் கவனம் செலுத்தப் போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *