சாதாரண கணக்கே தெரியாது, என் பேர்ல டுவிட்டர் கணக்கா…? கதறும் பிரபல நகைச்சுவை நடிகர்!

பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் பெயரில் போலியான டுவிட்டர் கணக்கை தொடங்கி, அதிலிருந்து தமிழக முதல்வருக்கு எதிராக பதிவு ஒன்றை சிலர் வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து தகவல் இருந்த செந்தில் வேப்பேரியில் உள்ள சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு இன்று தனது வழக்கறிஞருடன் வந்து புகார் கொடுத்துள்ளார். புகாரில், நான் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகாலமாக நடித்துக்கொண்டு இருக்கிறேன். கடந்த ஜூன் 12 அன்று எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் யாரோ சிலர் நான் பதிவு செய்ததுபோல் தமிழக அரசின் மீதும் தமிழக முதல்வர் மீதும், அவதூறான கருத்துக்களை ட்விட்டரில் போலியாக பதிவிட்டுள்ளார்கள் என தெரிவித்தார்.
எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் போலியான பதிவுகளை பதிவு செய்த நபர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். மேலும் கடந்த ஜுன் 12 அன்று எனது போலியான பெயரில் வெளியான டுவிட்டர் பதிவை நீக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், எனக்கு சாதாரண கணக்கே தெரியாது நான் எப்படி டுவிட்டர் கணக்கு தொடங்கி இருப்பேன் என நகைச்சுவையாக கூறினார்.