சிரஞ்சீவியின் தடுப்பூசி முகாம்

இந்தியாவில், தற்போது கொரோனா பெருந்தொற்று காலம் நிலவி வரும் நிலையில், சில திரைப்பிரபலங்கள் மக்களுக்கு உதவி வருகின்றனர்.
அந்த வகையில், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ஆக்ஸிஜன் பற்றாக்குறையைப் போக்குவதற்காக ஆக்ஸிஜன் வங்கி ஒன்றை ஆரம்பித்து தேவைப்படுபவர்களுக்கு உடனடியாக வழங்கி வந்தார்.
இந்நிலையில், தற்போது கொரோனா பாதுகாப்பு அறக்கட்டளை ஒன்றை தொடங்கி தெலுங்கு சினிமாவில் உள்ள 24 சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கும், தெலுங்கு திரைப்பட பத்திரிகையாளர்களுக்கும் தடுப்பூசி போடும் பணியை தொடங்கி உள்ளார்.
இது குறித்து சிரஞ்சீவி, “திரைப்படத் துறையை காக்கும் அத்தனை தொழிலாளர்களும், திரைப்பட பத்திரிகையாளர்களும் தங்கள் குடும்பத்தினர் அனைவருடனும் வந்து கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எல்லா நாட்களும் 24 மணி நேரமும் இந்த தடுப்பூசி முகாம் இயங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.