ரசிகர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் பிரபல தமிழ் நடிகர்!

சினிமாவில் பலரும் ஹீரோக்களாக நடித்து வருகின்றனர். ஆனால், ஒரு சிலரே நிஜ வாழ்க்கையிலும் ஹீரோக்களாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுள் முக்கியமானவர் நடிகர் சூர்யா.

நடிகர் சூர்யா அவரது அகரம் பவுண்டேஷன் மூலமாக பல ஏழை,எளிய மாணவர்களுக்கு கல்வி அளித்து வருகிறார். தான் படங்களில் நடித்து வரும் வருமானத்தின் ஒரு பகுதியை பொது சேவைகளுக்காக பயன்படுத்தி வருகிறார் நடிகர் சூர்யா.

இந்நிலையில், இந்த கொரோனா காலகட்டத்தில் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் தனது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த 250 ரசிகர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் என, அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார்.

தமிழகத்தில் ரசிகர்கள் பலரும் தங்களுக்கு பிடித்தமான ஹீரோக்களின் பெயரில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில், தனது ரசிகர்களுக்கு உதவிய நடிகர் சூர்யாவின் இந்த செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…