வெளியானது சூர்யா 40 அப்டேட்!

சூரரைப்போற்று வெற்றிக்குப்பின் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிகர் சூர்யா நடித்து வருகிறார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ், ராஜ்கிரண் உட்பட பல நடிகர்கள் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் சூர்யாவின் புகைப்படங்கள் வெளியாகி கவனம் ஈர்த்தன.
இந்தப் படத்தின் புதிய அப்டேட் ஒன்று இயக்குனர் பாண்டிராஜால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அவரது, ட்விட்டர் பக்கத்தில், அன்பான ரசிகர்களே படம் 35 சதவீதம் முடிஞ்சிடுச்சி. எடுத்தவரைக்கும் நல்லா வந்திருக்கு. அடுத்த ஷெட்யூல் ஊரடங்கு முடிந்தவுடன் தொடங்குவோம். எங்க டீம் ரெடியா இருக்கோம். டைட்டில் மாஸ்ஸா முன்கூட்டியே அறிவிப்புடன் வரும். ஜூலை வரைக்கும் டைம் கொடுங்க என்று தெரிவித்திருக்கிறார்.