படத்திற்கு ரசிகர்களிடம் பெயரைக் கேட்ட பிரபல இயக்குநர்
நடிகர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவர் பார்த்திபன். தன் படைப்புகள் எதுவானாலும் அதில் புதுமை இருக்க வேண்டும் என அதற்காக உழைப்பவர்.
அண்மையில் இவர் எழுதி இயக்கியிருந்த ஒத்த செருப்பு படம் தேசிய விருது வென்றது.
இதனைத் தொடரந்து அந்தப்படம் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப்படப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நடிகர் பார்த்தின்பன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ ஹிந்திக்கு என்ன பெயர் வைக்கலாம்? அம்மொழி அறிந்தவர்களுக்கு மட்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.