உலக சுற்றுச்சூழல் தினத்துக்காக மரம் நட்ட பிரபல தெலுங்கு நடிகர்

இன்று உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படிகிறது. இதனையொட்டி பிரபல தெலுங்கு நடிகர் மரம் நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகர் அல்லுஅர்ஜூன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மரம் நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும், அவர், “இயற்கையுடன் இணைந்த வாழ்வை ஏற்றுக்கொள்ள வேண்டும். இயற்கை நமக்குத் தருவதைப் போற்ற வேண்டும். எதிர்கால சந்ததிக்காக நமது புமியை பசுமையான இடமாக மாற்றுவோம்.
இந்த செயல் எனது மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது. நாம் அனைவரும் இதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்த பூமியை பாதுகாக்க நாம் ஒன்றிணந்து செயல்படுவோம்” என பதிவிட்டுள்ளார்.