தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிரபல நடிகை!

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக வீசி வருகிறது. கொரோனாவை வெல்ல தடுப்பூசி செலுத்திக் கொள்வதே முக்கிய தீர்வாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அரசியல் பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.
மேலும், அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வரிசையில், இன்று பிரபல தமிழ் நடிகை வாணி போஜன் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். மேலும், நடிகை தான் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தையும் சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார்.