ஜெகபதி பாபு மீண்டும் நாயகன் அவதாரமா?

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெகபதி பாபு. ஆரம்பத்தில், கதாநாயகனாக நடித்து வந்த இவர் தற்போது வில்லன் மற்றும் குணச்சித்திரப் பாத்திரங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்,

அண்மையில், விஸ்வாசம் படத்தில் வில்லனாக நடித்திருந்த இவர், தற்போது தமிழில் ரஜினி நடித்து வரும் ‘அண்ணாத்த’, விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.

எப்போதும் தாடியுடன் தோற்றமளிக்கும் இவர் மே 31 ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், தாடி இல்லாமல் தான் இருக்கும் ஒரு படத்தை பகிர்ந்திருந்தார்.

இதைப்பார்த்த பலர் ஜெகபதி பாபு மீண்டும் கதாயாகனாக நடிக்க உள்ளார். அதனால் தான் இந்த லுக் என கூறி வந்தனர். இதற்கு தற்போது ஜெகபதி பாபு விளக்கமளித்துள்ளார்.

அவர், “முழுவதும் ஷேவ் செய்த எனது தோற்றத்தை சமூக ஊடகத்தில் பார்த்து ஆயிரக்கணக்கானோர் நான் மீண்டும் நாயகனாக நடிக்கிறேனா என்று கேட்டனர். அவர்களுக்கான பதில், இல்லை என்பதே. நான் எப்படி இருக்கிறேன் என்பதை எனக்கு நினைவுபடுத்திக் கொள்ளவே இந்த முயற்சி” எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…