3000 குடும்பங்களுக்கு நம்பிக்கை ஒளி ஏற்படுத்தும் கேஜிஎப் நாயகன்

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதன்காரணமாக சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால், சினிமாவை நம்பியிருக்கும் பல தொழிலாளர்கள் வேலையிழந்து கடினமான காலத்தை எதிர்கொண்டு வருகின்றனர். அவ்வப்போது, பெரிய நடிகர்கள் அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில், பாதிக்கப்பட்டுள்ள தன் கன்னட சினிமா தொழிலாள்ர்களுக்கு, கேஜிஎப் படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலாமான நடிகர் யாஷ் உதவி செய்ய முன் வந்துள்ளார்.
இது தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், “கண்ணுக்குத் தெரியாத எதிரியால் நாடு முழுவதும் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். என் சொந்த கன்னட திரையுலக மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் சுமையைக் குறைப்பதற்காக 3000 குடும்பங்களுக்கு எனது சொந்த பணத்தில் இருந்து ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 5000 ரூயாய் செலுத்த உள்ளேன். இது முழுமையான தீர்வாகாது தான். ஆனாலும், அவர்களுக்கு ஒரு நம்பிக்கை ஒளியை ஏற்றும்” என்று தெரிவித்துள்ளார்.