தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிரபல நடிகைகள்!

கொரோனாவை வெல்லும் பேராயுதமாக தடுப்பூசி பார்க்கப்படுகிறது. இதனையடுத்து தமிழக அரசு தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்தி உள்ளது.

அரசியல் பிரமுகர்களும், திரை பிரபலங்களும் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர். மேலும், தாங்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று பிரபல தமிழ் நடிகைகள் ஆன மாளவிகா மோகனன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

மேலும், அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *