சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘ஜகமே தந்திரம்’. ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

கடந்த ஆண்டு வெளியாக வேண்டிய இப்படம் கொரோனா பொது முடக்கம் காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் வெளியாகவில்லை. கொரோனா பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டிருப்பதால் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இது ரசிகர்களில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும், ஜூன்18 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியானது. தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் லண்டலில் எப்படி தாதாவாக மாறுகிறார் என்பதே கதைக் களமாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *