தோழா பட இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் முடிய உள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் தோழா படத்தை இயக்கிய பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கவுள்ளார்.
தெலுங்கு ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் இயக்குநர் வம்சி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
வம்சி இறுதியாக மகேஷ் பாபு மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான மகராசி திரைப்படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.