தன் சொந்த செலவில் ஒரு கிராமத்திற்கே தடுப்பூசி வழங்கும் நடிகர்…காரணம் என்ன தெரியுமா?

கொரோனா என்ற கொடிய நோயைஎதிர்த்துப் போரிடுவதற்குஇதுவரை நமக்கு தெரிந்த ஆயுதம் தடுப்பூசி மட்டுமே ஆகும்.
அரசியல் பிரமுகர்களும், திரை பிரபலங்களும் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்தி கொள்வது மட்டுமல்லாமல், தாங்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
சமீபத்தில் தெலுங்கு பட நடிகர் மகேஷ்பாபு தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
இன்று அவரது அப்பாவும் நடிகருமான கிருஷ்ணாவின் 78 வது பிறந்தநாள். அதனைக் கொண்டாடும் விதமாக, மகேஷ் பாபு ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்திலுள்ள புர்ரிபாலம் கிராம மக்கள் அனைவருக்கும் மருத்துவமனைகளுடன் இணைந்து தனது சொந்த செலவில் தடுப்பூசியை வழங்கியுள்ளார்.
அந்த கிராம மக்களும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதனை நடிகர் மகேஷ்பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.