அந்த ஆசிரியரை தூக்கிலிடுங்கள்….கொதித்தெழுந்த பிரபல தமிழ் நடிகர்!

சென்னை பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி கைது செய்யப்பட்டுள்ளது தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த சம்பவத்தை கண்டித்து பலரும் தங்களது கருத்தினை தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆன்லைன் வகுப்புகளுக்கானவழிகாட்டு முறைகளை அனைத்து பள்ளிகளும் சரிவர கடைப்பிடிக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் பிரபல தமிழ் நடிகர் விஷால் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.

பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் தூக்கிலிடப்படவேண்டும். ஆனால், இப்பிரச்சனையை சாதி பிரச்சனையாக மாற்றாதீர்கள் என நடிகர் விஷால் தெரிவித்திருக்கிறார்.

இந்த கொடூர சம்பவத்திற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

பிஸ்பிபி பள்ளி ஆசிரியரியரின் பாலியல் துன்புறுத்தல் என்னை பயமுறுத்துகிறது. இப்பள்ளி மூடப்படவேண்டும் என்று உணர வைத்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்ட மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை. எனது நண்பர் அன்பில் மகேஷ் இப்பிரச்சனையில் வலுவான நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேசமயம், இதனை சாதி பிரச்சனையாக மக்கள் மாற்றுவது இழிவானது. மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த ஆசிரியர் தூக்கிலிடப்படவேண்டும். இப்போதாவது, பள்ளி நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். இதை சாதி பிரச்சனையாக மாற்றாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…