தன் வாழ்க்கைப் படத்திற்காக ஏ.ஆர். ரஹ்மானிடம் உதவி கேட்ட பிரபல பாடகி

பொதுவாக, ஒரு துறையில் சாதித்தவர்களை பெருமைப்படுத்தும் வகையில் அவர்களது வாழ்க்கையை திரைப்படமாக எடுத்து காட்சிப்படுத்துவது வழக்கம்.
அந்த வகையில், அனைத்து இந்திய மொழிகளிலும் 50 ஆயிரத்துக்கு மேல் பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை நிகழ்த்திய பிரபல சினிமா பின்னணி பாடகி பி.சுசிலா வாழ்க்கையை படமாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்களிடம் கல்ந்துரையாடல் நடத்தினார். அப்போது, பி.சுசிலாவின் வாழ்க்கைப் படத்தைப் பற்றி முக்கியத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
அவர், “ ஏழு தலைமுறைகளாக என்னைக் கவர்ந்த பி. சுசிலா அவர்களிடம் பேசினேன். அப்போது, என்னுடைய 99 சாங்க்ஸ் படத்தை ஓ.டி.டியில் பார்க்கும்படி கேட்டுக்கொண்டேன். அவர் படத்தை பார்த்து விட்டு என்னை அழைத்து படம் நன்றாக இருக்கிறது. என்னுடைய வாழ்க்கை கதையையும் இதுபோலத்தான் படமாக்க வேண்டும். அதற்கு நீங்கள் உதவ முடியுமா?” எனக் கேட்டதாக கூறியுள்ளார்.
இதனால், பின்னணி பாடகி சுசிலாவின் வாழ்க்கைப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.