’96’ பட நடிகைக்கும் பள்ளியில் இப்படி நடந்துள்ளதாம்!
அண்மையில், சென்னையில் உள்ள பத்ம சேஷாத்திரி பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் ராஜகோபாலன் மீது மாணவிகள் பலரும் பாலியல் புகாரளித்தனர்.
இதைதொடரந்து, காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், 96, மாஸ்டர், கர்ணன் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை கெளரி கிஷன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் பள்ளி நாட்களைப் பற்றி பதிவிட்டுள்ளார்.
அதில். தான் படித்த அடையாறு பள்ளியிலும், ஆசிரியர்கள் சிலர், மாணவ – மாணவிகளை அசிங்கமாக பேசுவது, சாதியை வைத்து பேசுவது, மிரட்டுவது, உடல் அமைப்பை கிண்டல் செய்வது, கேரக்டரை கேவலப்படுத்துவது, ஆதாரமில்லா குற்றச்சாட்டுகளை மாணவ-மாணவியர் மீது சுமத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவர்.
நான் மட்டுமல்ல என்னுடன் படித்த பல மாணவியர்களும் இந்த பாதிபுக்கு ஆளாகி இருக்கிறோம் என தெரிவித்துள்ளார். மேலும், தற்போது அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளும் இது போன்றி உடனடியாக புகாரளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.