தெலுங்கு இயக்குநரின் படத்தில் விஜய்

நடிகர் விஜய் தற்போது, நெல்சன் இயக்கும் ‘விஜய் 65’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவல் குறைந்த பிறகு, சென்னையில் 2 ஆம் கட்டப் பிடிப்புகள் தொடங்கும் என கூறப்பட்டிருந்தது.

இந்தப் படத்தின் படப்பிடிப்புகளே நிறைவடையாத நிலையில், விஜய்யின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்குப்பின் விஜய் லோகேஷ் கனகராஷ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

இதற்கிடையில், நடிகர் விஜய் நேரடி தெலுங்கு படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. பிரபல தெலுங்கு பட இயக்குநர் வம்சியின் இயக்கத்தில் தான் விஜய் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இயக்குநர் வம்சி சென்னை வந்து, விஜய்யைச் சந்தித்துச் சென்றுள்ளதாகவும், அவர்கள் கூட்டணியில் படம் உருவாவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாடு அமைதியை குழைக்கும்  சீமான் மீது போலீசில் வழக்கறிஞர் புகார் 

திருச்சி மாவட்டம், மணப்பாறை டிஎஸ்பி ராமநாதனிடம், அரசு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் அளித்துள்ள புகாரில், …

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றம்… சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன்

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என கரூர்…