கொரோனா ஒரு சாதாரண நோய் அல்ல…. எச்சரிக்கும் பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர்!

நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெருந்தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளொன்றுக்கு 4 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது.
இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஆக்சிஜன் சிலிண்டருக்கான தட்டுப்பாடு நீடித்து வருகிறது. இதனால் நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காமல் இறக்கும் அவலநிலை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி ட்விட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கொரோனாவால் மக்கள் உயிரிழப்பதை கண்முன்னே பார்க்கிறேன். இது மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது. இந்த கொரோனா நோயை யாரும் சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்தியாவசிய தேவை தவிர வேறு எந்தக் காரணங்களுக்காகவும் மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.