அக்காவாக ஜோதிகா!
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஜோதிகா, திருமணத்திற்குப் பிறகு நடிப்பிற்கு சிறிது இடைவெளி விட்டிருந்தார். மீண்டும், 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ எண்ட்ரீ கொடுத்து, தொடர்ந்து, கதாயாகிகளுக்கும், சமூக கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.
ஆனால், இடையில் ’தம்பி’ படத்தில் கார்த்தியின் அக்காவாக ஜோதிகா நடித்திருந்தார். பாகுபலி படத்தின் மூலம் உலகத்திற்கே அறிமுகமான நாயகனான பிரபாஸ் தற்போது, சலார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஸ்ருதிஹாசன் இவருக்கு நாயகியாக நடிக்கிறார்.
இந்தப் படத்தை அதிரடி ஆக்ஷன் படமான கேஜிஎப்பை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்குகிறார். இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்தப்படத்தில் ஜோதிகாவும் இணைந்துள்ளதார். பிரபாஸிற்கு அக்காவாக ஜோதிகா நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.