தடுப்பூசி செலுத்திக் கொண்ட ரம்யா பாண்டியன்!
திரைப்பட நடிகை ரம்யா பாண்டியன் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அவர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ஜோக்கர் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ரம்யா பாண்டியன். அதன் பின்னர் திரைப்படங்களில் பெரிதாக அவர் கவனம் செலுத்தவில்லை.
விஜய் டிவியில் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார்.
மக்களிடையே கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதில் தயக்கம் இருப்பதால் அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர். மேலும், மக்களுக்கு தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.