பொன்னம்பலத்துக்கு உதவிய தெலுங்கு சூப்பர் ஸ்டார்
தமிழ்படங்களில் சண்டை பயிற்சி கலைஞராகவும், வில்லனாகவும் நடித்து புகழ்பெற்றவர் பொன்னம்பலம். கடந்த வருடம் இவருக்கு கடந்த வருடம் உடல்நிலை பாதிக்கப்பட்ட போது, நடிகர் கமலஹாசன் அவரது மருத்துவ செலவை ஏற்பதாகவும், அவரது குழந்தைகளின் கல்விச் செலவையும் ஏற்பதாக அறிவித்தார்.
இந்நிலையில், அவருக்கு இப்போது சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவைச்சிகிச்சைக்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி உதவி செய்துள்ளார். அறுவைச் சிகிச்சை முடிந்து குணமடைந்துள்ள பொன்னம்பலம், அவருக்கு நன்றி தெரிவித்து காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த காணொலியில், “சிரஞ்சீவி அண்ணனுக்கு வணக்கம். ஜெய் ஸ்ரீராம். ரொம்ப நன்றி அண்ணே. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு எனக்கு நீங்கள் அளித்த ரூ.2 லட்சம், மிகவும் உதவியாக இருந்தது. இந்த உதவியை உயிருள்ளவரை மறக்க மாட்டேன். அண்ணனுக்கு என் மனமார்ந்த நன்றி. உங்கள் பெயரைக் கொண்ட ஆஞ்சநேயர் என்றும் உங்களை சிரஞ்சீவியாக வைத்திருப்பார். நன்றி அண்ணே” என்று உருக்கமாக பேசியுள்ளார்.