இப்படியும் போட்டோவுக்கு போஸ் கொடுக்கலாமா….ஏஞ்சலினா ஜூலியின் அசத்தலான போஸ்!

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி தேனீக்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் தனது உடல் முழுவதும் தேனீக்கள் மொய்க்க போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார்.
நேஷனல் ஜியோகிராபிக் இதழுக்காக இந்த போட்டோ ஷூட்டை இவர் நடத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது. இதற்காக அவர் கிட்டத்தட்ட 18 நிமிடங்கள் உடல் மற்றும் முகத்தில் தேனீக்கள் மொய்க்க போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார்.
கொரோனா காலக்கட்டத்தில் இந்த சவாலான போட்டோ ஷூட் நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டோ ஷூட்டின் நோக்கம் தேனீக்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே எனவும் கூறப்படுகிறது.