படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ… கடவுளாகப் பார்க்கும் மக்கள்!
நாட்டில் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மக்களுக்கு உதவும் விதமாக சமூக ஆர்வலர்கள் பலரும் பல்வேறு உதவிகள் செய்து வருகின்றனர்.
திரைப்பட வில்லன் ஒருவர் நிஜ வாழ்க்கையில் மக்கள் கொண்டாடும் ஹீரோவாக இந்த கொரோனா சூழலில் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
சோனு சூட் என்ற வில்லன் நடிகரை ரியல் ஹீரோவாக காட்டியது, கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர் செய்த பேருதவிகள். இப்போதுவரை, தனது சமூக வலைதளங்களில் கோரிக்கை வைப்பவர்களுக்கு மருத்துவ உதவிகள், கல்விக்கான உதவிகள் என்று தனது கரங்களை நீட்டி வருகிறார். இதனால், சோனு சூட்டுக்கு சமூக வலைதளங்கள் மூலமாக பலர் உதவி கேட்டு கோரிக்கை வைக்கிறார்கள். தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை அனுப்பி வைத்து வருகிறார்.
சோனுசூட்டின் மனித நேயத்தப் பாராட்டி ஆந்திர மாநிலம் சித்தூரில் சூனு சூட்டின் மிகப்பெரிய கட் அவுட்டை வைத்து மாலைப்போட்டு பொதுமக்கள் பால் ஊற்றி வணங்கியுள்ளனர். அதோடு, பொதுமக்களுக்கு உணவையும் வழங்கி, நாங்கள் இனிமேல் தொடர்ந்து பொதுமக்களுக்கு சேவை செய்யவிருக்கிறோம். சோனு சூட்தான் எங்களுக்கு இன்ஸ்பிரேஷன் என்றும் தெரிவித்துள்ளனர்.