வீடு திரும்பினார் விஜயகாந்த்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் இரண்டு நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட பல்வேறு தலைவர்கள் விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டுமென பிரார்த்திப்பதாக கூறியிருந்தனர்.
இந்நிலையில் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.