47 வயதாகியும் திருமணத்திற்கு நோ சொன்ன இயக்குனர்…பெற்றோரே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்!

ஈரான் நாட்டைச் சேர்ந்த 47 வயதாகும் பிரபல இயக்குனர் பாபக் கோரம்டினை அவரது பெற்றோரே கொடூரமாக கொலை செய்துள்ளனர். பாபக் கோரம்டின் கொலை குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்த விசாரணையின் போது அவர்களுக்கு இந்த அதிர்ச்சியளிக்கும் உண்மை தெரியவந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் இந்த இயக்குனருக்கும் அவரது பெற்றோருக்கும் திருமணம் செய்வது குறித்த பேச்சுவார்த்தையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து கோபமடைந்த இயக்குனரின் பெற்றோர் அவர்களது மகனை ஆள் வைத்து கொலை செய்து குப்பைத் தொட்டியில் வீசியுள்ளது தெரியவந்துள்ளது.

இது குறித்து காவல் துறையினர் அவர்களிடம் கேட்ட போது, 47 வயதாகியும் எங்கள் மகன் திருமணம் செய்து கொள்ளாமல் எங்களை இம்சை படுத்தி வருகிறான். அதன் காரணமாகவே அவனைக் கொலை செய்து விட்டோம் என ஒப்புக் கொண்டுள்ளனர்.

இயக்குனர் கோரம் டின் பல குறும்படங்களை எடுத்துள்ளார். அதில் தன் குடும்பத்தைப் பிரிந்து தனிமையில் இருப்பது தொடர்பாக அவர் ஒரு குறும்படம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *