ஒரு லட்சம் கொரோனா நிதியளித்த ஈஸ்வரன் பட நடிகை!
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக மக்கள் நிதியளித்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
முதல்வரின் வேண்டுகோளை ஏற்று பலரும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதியளித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஜெயம் ரவியின் பூமி, சிம்புவின்
ஈஸ்வரன் படங்களில் ஹீரோயினாக நடித்த நிதி அகர்வால் 1 லட்சம் ரூபாய் தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். தற்போது, மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நிதிஅகர்வால் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.