நடிகர் ரஜினி ரூ.50 லட்சம் கொரோனா நிதி

தமிழகத்தில் நிலவி வரும் கொரோனா சூழலால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக பொது மக்கள் தங்களால் முடிந்த நிவாரண நிதியை வழங்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
அந்த வகையில், பல பொது மக்களும், அரசியல் தலைவர்களும் திரைப்பிரபலங்களும் தங்களால் முடிந்த நிவாரண உதவிகளை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தும் இன்று ரூ.50 லட்சத்தைக் கொரோனா நிவாரண நிதியாக முதல்வரை நேரில் சந்தித்து கொடுத்துள்ளார். பின்னர், முதல்வராக பதவியேற்றுள்ள மு.க. ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.