பிரபல இயக்குனரின் மனைவி கொரோனாவால் பலி… நேரில் அஞ்சலி செலுத்திய உதயநிதி ஸ்டாலின்!

இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்ட அருண்ராஜ் காமராஜின் மனைவி சிந்துஜா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இயக்குநர், நடிகர், பாடலாசியர் என பன்முகத்தன்மை கொண்டவர் அருண்ராஜா காமராஜ், கபாலி படத்தில் இவர் எழுதிய ‘நெருப்புடா’ பாடல் பலரின் பாராட்டையும் பெற்றது. அதனைத்தொடர்ந்து, சிவகார்த்தியேயன் தயாரிப்பில் ‘கனா’ படத்தை இயக்கிய இவர் தற்போது, இந்தியில் ஹிட் அடித்த ’ஆர்டிகிள் 15’ படத்தை உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் போனிகபூர் தயாரிப்பில் இயக்கி வருகிறார்.  38 வயதாகும் இவரது மனைவி சிந்துஜா சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர் உயிரிழந்தார்.

அவரது உடலுக்கு திமுக இளைஞரணி செயலாளரும், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் சகோதரி சிந்துஜாவின் உயிரிழப்பு குறித்து கேள்விப்பட்டதும் மிகுந்த மனவேதனை அடைந்ததாக கூறினார். அவர் சிந்துஜாவை இழந்து வாடும் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *