வெளியானது ’ஆன்டி இண்டியன்’ பர்ஸ்ட் லுக்
ஒரு படம் திரைக்கு வருகிறது என்றால் அதில் நடித்துள்ள ஹீரோக்களின் ரசிகர்கள் ஆவலோடு காத்திருப்பார்கள். ஆனால், இந்த படத்தை அவர் எப்போது விமர்சனம் செய்வார் என்பதற்காகவே காத்திருக்கும் ஆட்களும் இருக்கிறார்கள்.
பிரபல வலைதள விமர்சகர் புளுசட்டை மாறனின் விமர்சனத்திற்குத் தான் அவ்வளவு எதிர்பார்ப்பு. அவரின் விமர்சனத்தைப் பார்த்து விட்டுப் பின்பு படத்திற்கு செல்பவர்களும் இருக்கிறார்கள்.
“ஒரு படத்தை இவ்வளவு விமர்சனம் செய்ரல நீ ஒரு படம் எடுத்து பாரு” என்று யாரோ சொன்னது இவர் காதில் கேட்டு விட்டது போல். 2019 ஆம் தானும் ஒரு படத்தை இயக்கப்போவதாக அறிவித்திருந்தார். மேலும், அந்த படத்தின் கதை. திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாமே அவர் தான்.
‘ஆன்டி இண்டியன்’என பெயரிடப்பட்ட அந்த படம் தணிக்கைக்காக அனுப்பப்பட்டது. ஆனால், அரசியல் சார்ந்த கதைகளம் என்பதால் இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் தடை விதித்தனர்.
இதனை எதிர்த்து தயாரிப்பாளர் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.