கில்லி ’ஆதிவாசி’ மாறன் கொரோனாவுக்கு பலி

2004ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தில் நடித்தவர் துணை நடிகர் மாறன்.ஆதிவாசி என்ற கேரக்டரில் அந்த படத்தில் நடித்த அவர், டிஷ்யூம், பட்டாசு, தலைநகரம், வேட்டைக்காரன், கேஜிஎஃப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் .

வில்லன் மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், கானா பாடல்களையும் மேடை கச்சேரிகளில் பாடி வந்துள்ளார்.

இந்நிலையில், இவர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனாலும், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *