காலா நடிகைக்கு எவ்வளவு பெரிய மனசு!
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் குழந்தைகள் உரிமை குறித்து குரல் கொடுத்து வரும் சர்வதேச தன்னார்வ அமைப்புடன் இணைந்து நூறு படுக்க வசதி கொண்டு தற்காலிக மருத்துவமனையை நிறுவும் முயற்சியை முன்னெடுத்துள்ளார் நடிகை ஹியூமா குரேஷி. இவர் ரஜினியின் காலா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரது இந்த செயலுக்கு திரையுலகினர் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.