அண்ணாத்த படத்திற்காக உடல் எடையைக் குறைத்த பிரபல நடிகர்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் படம் அண்ணாத்த.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மிகவும் தீவிரமாக நடைபெற்று வந்தது. கொரோனா பரவலின் காரணத்தால் படப்படிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிகர் பாலாவும் இணைந்து நடிக்கிறார். ஐந்து மொழிகளில் 50-க்கும் மேலான படங்களில் நடிகர் பாலா நடித்துள்ளார். ஆனால், அண்ணாத்த படத்தில் நடிகர் ரஜினியுடன் இணைந்து நடிப்பது மிகவும் புதிய அனுபவம் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்திற்காக தனது உடல் எடையை 15 கிலோ குறைத்துள்ளார்.

நடிகர் ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது சிறப்பான அனுபவம் என்றும் மேலும் ரஜினிகாந்த் பிறப்பிலேயே நடிகர் எனவும் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *