என்ஜாயி என்ஜாமிபாடலுக்கு நடனமாடிய பெண் காவலர்கள்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண் காவலர்கள் என்ஜாயி என்ஜாமி பாடலுக்கு நடனமாடி கொரோனா விழிப்புணர்வில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த இக்கட்டான காலகட்டத்தில் முன் களப்பணியாளர்கள் பலரும் தன்னலம் பாராது போராடி வருகின்றனர்.
சிலர் பாடல்கள் பாடியும், நடனமாடியும் பொதுமக்களிடையே  விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வரிசையில் பெண் காவலர்களின் என்ஜாயி என்ஜாமி நடனம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *