மணம் நிகழ்வதை விட குணம் நிகழ்வதே மங்கலம் – கவிஞர் வைரமுத்து!
தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் 27 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
கொரோனா பரவல் குறித்து கவிஞர் வைரமுத்து தற்போது ட்விட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் தமிழக அரசு திருமண மண்டபங்களை தற்காலிக கொரோனா மருத்துவமனைகளாக மாற்றினால் முதல் மண்டபமாக அவரது பொன்மணி மாளிகை மண்டபத்தை தருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், மணம் நிகழ்வதைக் காட்டிலும் குணம் நிகழ்வதே மங்கலம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்த பதிவு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.