தமிழகத்தில் முழு ஊரடங்கு… பிரபல நடிகர் வரவேற்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் வருகிற மே 10 முதல் மே 24 வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் மிகவும் தீவிரமாக வீசி வருகிறது. இதனையடுத்து இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த முழு ஊரடங்கை நடிகர் சித்தார்த் வரவேற்றுள்ளார். இதில் அவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம் என்று தெரிவித்துள்ளார். மேலும் நாம் பெரிய ஆபத்தில் இருப்பதாகவும் அந்த ஆபத்திலிருந்து ஒவ்வொருவரையும் காப்பாற்றுவது நம் கடமை எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *