ராணுவ வீரராக இருந்து நடிகரானவர் கொரோனாவால் பலி!

இந்தியாவில் பரவி வரும் கொரோனா இரண்டாம் தொற்றுக்கு பல திரைபிரபலங்களும் பலியாகி வருகின்றனர். அந்த வரிசையில்  பாலிவுட் நடிகர் பிக்ரம்ஜீத் கன்வர்பாலும் இணைந்துள்ளார்.

நடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ராணுவத்தில் இருந்து பணி ஓய்வு பெற்றப் பின் நடிப்பின் மீது தனது கவனத்தைச் செலுத்தினார். 2003 ஆம் ஆண்டில் இருந்து தனது நடிப்புப் பணத்தைத் தொடங்கினார்.

பிக்ரம்ஜீத் – பேஜ் 3, பாப், கரம், கார்ப்பரேட், ஜோக்கர், ஹாரர் ஸ்டோரி போன்ற பல படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். அண்மையில் ஸ்பெஷல் ஓபிஎஸ் போன்ற இணையத் தொடர்களிலும் நடித்தார்.

இந்நிலையில், அவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *