கொரோனாவால் உயிரிழந்த துப்பாக்கிப் பாட்டி!
துப்பாக்கி பாட்டி என பரவலாக அறியப்படுபவர் சந்திரா தோமர். இலக்குகளை குறிபார்த்து சுடும் ஷார்ப் ஷூட்டரான அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. இந்நிலையில் அவர் இன்று காலமாகியுள்ளார். அவருக்கு வயது 89. இன்று மீரட் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
65 வயதில் துப்பாக்கியை ஏந்திய இவரது கதையை திரைப்படமாக உருவாக்கியும் இருந்தனர். அதில் டாப்சி நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.