சித்தார்த்துக்கு பெருகும் ஆதரவு!
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இங்கு எல்லாம் தடுப்பூசி மற்றும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை. யாராவது வதந்தி பரப்பினால் அவர்கள் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்திருந்தார்.
”பொய் சொல்வது சாமானிய மனிதனோ, சாமியாரோ, தலைவரோ யாராக இருந்தாலும் அறை விழுவதை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என தனது பாணியில் கருத்து பதிவிட்டிருந்தார். இதற்கு பாஜக தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
ஆனால், ரசிகர்கள் சித்தார்த்துக்கும், அவரது கருத்துக்கும் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், உத்தரபிரதேச முதல்வரை அவதூறாக பேசியதாக நடிகர் சித்தார்த் மீது பாஜக நிர்வாகி ஆனந்தன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.
சித்தார்த்தும், “கடந்த 24 மணி நேரத்தில் எனக்கும், என் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்து 500 போன் அழைப்புகள் வந்து விட்டது. பாஜகவினர் என் நம்பரை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அனைத்து தகவலையும் காவல் துறையிடம் ஒப்படைக்க இருக்கிறேன்” என கூறியுள்ளார்.
இதனையடுத்து, அவருக்கு ரசிகர்களும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். நடிகை பார்வதியும் சித்தார்த்துக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். #We Stand With Siddharth என்ற ஹேஸ்டாக்குகள் ட்விட்டரில் ட்ரண்ட் ஆகி வருகிறது.