தெலுங்கிலும் வருகிறான் ‘கர்ணன்’

கடந்த 9 ஆம் தேதி, மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கர்ணன் படம் வெளியானது. வி. கிரியேஷன் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார்.

அதில், தனுஷ்க்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்திருக்கிறார். லால், கெளரி கிஷன், லட்சுமி பிரியா, நட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

தமிழில் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இந்தப்படம் தெலுங்கிலும் ரீமேக் ஆகிறது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லம் கொண்டா சுரேஷ் கர்ணன் படத்துக்கான ரீமேக் உரிமையைப் பெற்றுள்ளார்.

இதில், தயாரிப்பாளரின் மகன் பெல்லம் கொண்டா சாய் நிவாஷ் நாயகனாக நடிப்பார் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவுப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதிலும், ரஜிஷா விஜயன் நாயகனாக நடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *