ஸ்டைலிஸ் ஸ்டாருக்கு கொரோனா உறுதி!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பின் வேகம் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது.

அந்த வரிசையில், தற்போது ‘ஸ்டைலிஸ் ஸ்டார்’ என ரசிகர்களால் அழைக்கப்படும் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அஜ்ஜூனும் இணைந்துள்ளார். அவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில், “ கொரோனா பரிசோதனையில் எனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னை சந்தித்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். என் நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *